வனப்பகுதிகளில் உயிரிழக்கும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது, முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் சுற்றறிக்கை
சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.) வனப்பகுதிகளில் உயிரிழக்கும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது, முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளதாக சென்னை உய
Elephant


சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.)

வனப்பகுதிகளில் உயிரிழக்கும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது, முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

அசல் வீடியோ பதிவுகளை மண்டல அளவில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் சந்தேகத்துக்குரிய வகையில் இறந்த யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் டி.என்.ஏ., மாதிரிகளை கட்டாயம் சேகரித்து, பாதுகாக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை தகவலை பதிவு செய்து வழக்கை ஜனவரி 23 ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Hindusthan Samachar / P YUVARAJ