கோடியக்கரையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 9 மீனவர்கள் கைது!
மயிலாடுதுறை, 03 ஜனவரி (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகு, மற்றும் பெருமாள்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுகுட்டி என்ற மீனவருக்கு சொந்தமான படக்கில், பாலகிரியைச் சேர்ந்த த
Ramanathapuram Boat


மயிலாடுதுறை, 03 ஜனவரி (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகு, மற்றும் பெருமாள்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுகுட்டி என்ற மீனவருக்கு சொந்தமான படக்கில், பாலகிரியைச் சேர்ந்த தங்கராஜ், மதன், ராமலிங்கம், பெருமாள் பேட்டை சேர்ந்த அன்புராஜ், குமார், கௌஷிக், ரீகன், பொன்னுகுட்டி மற்றும் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் ஆகிய 9 பேர் 2 பைபர் படகுகளில் நாகை மாவட்டம் கோடியக்கரையிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து ஒன்பது மீனவர்களை கைது செய்து, இலங்கை காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN