மார்கழி பௌர்ணமி தினத்தையொட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை, 03 ஜனவரி (ஹி.ச.) மார்கழி பௌர்ணமி தினத்தை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகக் கருதப்படும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை
கிரிவலம்


திருவண்ணாமலை, 03 ஜனவரி (ஹி.ச.)

மார்கழி பௌர்ணமி தினத்தை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகக் கருதப்படும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையைச் சுற்றி, மார்கழி மாத பௌர்ணமி அன்று அதிகாலை முதல் மாலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோயிலின் மலையை, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவபெருமானாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இந்த வகையில், உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் உள்ள, மலையைச் சுற்றி, பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையில் நடந்து வந்து வலம் வருகின்றனர்.

அதன்படி, மார்கழி மாத பௌர்ணமி நேற்று மாலை 06:45 மணிக்குத் தொடங்கி இன்று மாலை 04:43 மணி வரை நீடிக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதற்காக, நேற்று காலை முதலே திருவண்ணாமலை நகர் முழுவதும், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரத் தொடங்கினர்.

இதையடுத்து, 14 கிலோமீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார், ஆதி அருணாசலேஸ்வரர் கோயில்கள் உட்பட பல்வேறு கோயில்களில் அக்னிலிங்கம், எமலிங்கம், வாயுலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், குபேரலிங்கம் உள்ளிட்ட எட்டு லிங்கங்களையும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி நிலவொளியில் தரிசித்து, நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தனர்.

இந்த நிலையில், இரவு முழுவதும் கடும் குளிர் நிலவிய போதிலும், மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam