ஏஐ மூலம் அப்கிரேட்டாகும் கூகுள் போட்டோஸ்
சென்னை, 3 ஜனவரி (ஹி.ச.) முன்பெல்லாம், ஒரு போட்டோவை கிளிக் செய்து வைத்துவிட்டு, அதை எப்போதாவது பார்க்கும்போது, அது சில கதைகளை நினைவுக்கு கொண்டுவரும். ஆனால், கூகுள் போட்டோஸ் அதை மேலும் துல்லியமாகவும், அழகாகவும் உங்களது நினைவுகளை மலர செய்கிறது. ஏஐ ம
ஏஐ மூலம் அப்கிரேட்டாகும் கூகுள் போட்டோஸ்


சென்னை, 3 ஜனவரி (ஹி.ச.)

முன்பெல்லாம், ஒரு போட்டோவை கிளிக் செய்து வைத்துவிட்டு, அதை எப்போதாவது பார்க்கும்போது, அது சில கதைகளை நினைவுக்கு கொண்டுவரும். ஆனால், கூகுள் போட்டோஸ் அதை மேலும் துல்லியமாகவும், அழகாகவும் உங்களது நினைவுகளை மலர செய்கிறது.

ஏஐ மூலம் அப்கிரேட்டாகும் கூகுள் போட்டோஸ், உங்களது பழைய நினைவுகளை பிடித்தமானவர்களுடன் ஷேர் செய்வது முதல் ஒரு கிளிக்கில் மான்டேஜ் வீடியோக்களை எடிட் செய்வது வரையில் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல போகிறது.

உங்களது ஸ்மார்ட்போனில் நீங்கள் எடுக்கும் ஒரு போட்டோவுக்கு பின்னால், தேதி மற்றும் நேரம் மட்டுமே பல ஆண்டுகளாக குறிப்பிடப்பட்டன. ஆனால், இப்போது, அந்த போட்டோவை எங்கே எடுத்தோம், எந்த ஸ்மாட்போன் மாடலில் எடுத்தோம், அப்பெர்சர் & ஷட்டர் ஸ்பீடு எவ்வளவு, பில்டிங், கார்கள், பெட்ஸ் போன்ற ஆப்ஜெக்ட்ஸ் டேக்குகள் போன்ற பல்வேறு டேட்டாக்கள் அதில் வருகின்றன.

இதையெல்லாம், செய்ய உங்களது கூகுள் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் போட்டோஸ் மட்டுமே பக்கா ஆப்ஷனாக இருக்கிறது. ஏனென்றால், கூகுள் மேப்ஸ், கூகுள் காலெண்டர், கூகுள் நோட்ஸ் போன்ற ஒட்டுமொத்த டேட்டாக்களையும் அலசி ஆராய்ந்து கூகுள் போட்டோஸ் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது ஒரு போட்டோவுக்கு பின்னால், பல நினைவுகளுடன் டேட்டாக்களை சேகரிக்கிறது.

கியூஆர் கோடுடன் ஷேர் ஆல்பம் - உங்களது போட்டோக்களை ஃபைல் டிரான்பர் செய்திருப்பீர்கள் அல்லது ஈமெயில், வாட்ஸ்அப் போன்ற ஆப்கள் மூலம் அனுப்பி வைத்திருப்பீர்கள். ஆனால், அதை ஆல்பமாக அனுப்பவதில் குழப்பம் ஏற்படலாம். இதற்காகவே கூகுள் போட்டோஸ் ஆப்-பில் கியூஆர் கோடு மூலம் ஆல்பம் ஷேர் செய்யும் பீச்சர் வந்துள்ளது.

பிளேசஸ் டேப் - கூகுள் போட்டோக்களில் இருக்கும் கலெக்சன் டேப்-க்கு கீழே பிளேசஸ் டேப் வருகிறது. இதில் கூகுள் மேப்ஸ் உதவியுடன் உங்களது ஒவ்வொரு போட்டோவும், ஜியோகிராஃபிரிக்கலி டேக் செய்யப்பட்டுவிடும். இதற்கு நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனில் லேகேஷனை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும். ஆகவே, டேக் செய்த இடத்தை தெரிந்து கொள்ளலாம்.

யுவர் சர்ச்சசஸ் - இந்த பீச்சர் மூலம் கூகுள் போட்டோக்களில், நீங்கள் பார்க்க விரும்பும் போட்டோவை சர்ச்ச் செய்து கொள்ளலாம். இதற்கு பிரத்யேக கீ-வேர்டுகள் தேவையில்லை. கிரீன் கலர் சர்ட் போட்டிருக்கும் எனது போட்டோ என்று டைப் செய்தாலே போதும், அந்த போட்டோ உங்களுக்கு தேடி கொடுக்கப்படும். இதேபோல பீச், கார்டன் போன்றவற்றையும் டரை செய்யலாம்.

மாதம் அல்லது வருட ரீகேப் - கூகுள் போட்டோவில் இருக்கும் உங்களது போட்டோக்கள் மாதம் மற்றும் வருடம் வாரியாக பிரித்து ஆல்மாக இருக்கும். இதை நீங்கள் பெஸ்ட் ஆப் மன்த் அல்லது இயர் எண்ட் ரீகேப் போன்று பிரித்து பார்த்து கொள்ளலாம். அதே போல நண்பர்கள் மற்றும் ஃபேமிலி மெம்பர்களுக்கு ஆல்பமாக ஷேர் செய்து செய்யலாம்.

பர்சோனல் மான்டேஜ் டூ ஷேர் - கூகுள் போட்டோக்களில் இருக்கும் + பட்டனை கிளிக் செய்து, உங்களது ஆல்பத்தில் இருக்கும் குறிப்பிட்ட போட்டோ அல்லது வீடியோக்களை தேர்ந்தெடுத்து, அதை ஷார்ட் வீடியோவாக மாற்றி கொள்ளலாம். இதில் மியூசிக் இடம்பெறும். அதே போல இவெண்ட், இடம் போன்ற விவரங்களையும் அதில் ஆட் செய்யலாம்.

இப்படி ஏகப்பட்ட பீச்சர்களை இந்த கூகுள் போட்டோஸ் கொடுக்கிறது. அதே போல மேஜிக் எடிட்டர் பீச்சருக்கும் சப்போர்ட் கொடுக்கிறது.

இந்த மேஜிக் எடிட்டர் பீச்சரானது, பிக்சல் 9 மாடல்களில் மட்டுமே கிடைக்கிறது.

மற்ற பிக்சல் மாடல்களுக்கும் அப்கிரேட் செய்யப்பட்டுவருகிறது.

ஜூன் மாதம் முதல் மற்ற ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மாடல்களில் கிடைக்க இருக்கிறது.

Hindusthan Samachar / JANAKI RAM