Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 03 ஜனவரி(ஹி.ச.)
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா அரியூர் தங்க கோவில் நிருவனர் சக்தி அம்மா அவர்களின் 50-வது ஜெயந்தி விழா இன்று ஸ்ரீ புரத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக
குடியரசு துணை தலைவர்
சி பி ராதாகிருஷ்ணன் ஹெலிகாப்டர் மூலம்
பொற்கோவிலுக்கு வருகை தந்தார்.
பின்னர் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று சக்தி அம்மாவிற்கு பூஜைகள் செய்து வழிபட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய
சி.பி ராதாகிருஷ்ணன்,
நான் இங்கு வருவது முதல் முறை அல்ல, 2000 முதல் 25 ஆண்டுகளாக நான் இங்கு வருகிறேன்.
நான் மட்டுமல்லாது குடியரசு தலைவர்கள் அப்துல்கலாம், ராம்நாத் கோவிந், இன்றைய குடியரசு தலைவர் வரை இங்கு வந்தது மிக சிறப்பு.
இறை சக்திக்கு மீறிய சக்தி உலகில் எங்கும் இல்லை, மோடிஜீயும் முதலமைச்சாராக இங்கு வந்து உள்ளார். எல்லோரும் நன்றாக இருப்பதே சக்தி அம்மாவின் சிந்தனை மற்றும் கோட்பாடு, இந்த ஆண்மிக சக்தியை யாராலும் ஒரு போதும் அழிக்க முடியாது.
பக்தியோடு பல்வேறு சமுதாய பணிகளை சக்தி அம்மா ஆற்றி வருகிறார்.
கொரானா காலத்தில் பல குடும்பங்களுக்கு உணவு அளித்தவர் சக்தி அம்மா, இங்கு மட்டுமல்லாது இலங்கைக்கு தானே சென்று அங்கு உள்ள மக்களுக்கு உதவியவர் சக்தி அம்மா.
திருமூலர் வாக்கு இன்று சக்தி அம்மா மூலம் மக்களிடையே பரவி வருகிறது. என்று பேசினார்.
இந் நிகழ்ச்சிக்கு மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சர்
எல்.முருகன், கோயமுத்தூர் தொழில் அதிபர் ராமசாமி, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி வேலூர் விமான நிலையம், பொற்கோவில் மற்றும்
வேலூர் மாநகரம் முழுவதும் சுமார் 1100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பொற்கோவில் சுற்றி
300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் டிரோன்கள் பறக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Durai.J