Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 03 ஜனவரி (ஹி.ச.)
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் - திருச்சி தேசிய
நெடுஞ்சாலையில் தோரணக்கல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருஉருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து
மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சிறப்பு
அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து கட்டபொம்மனின்
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்ற தேவராட்டம் நிகழ்ச்சியை கண்டு ரசித்த ஜோதிமணி, அங்கிருந்த பெண்களுடன்
சேர்ந்து கும்மி அடித்து, நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் உற்பத்தி பூசல் காரணமாக ஜோதிமணி நேற்று தனது எக்ஸ் வலைதளத்தில் மிக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் .ஒரு சிலரின் சுயநலத்துக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம், கொஞ்சமாக அழிவின்
பாதையில் சென்று கொண்டிருக்கிறது, இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம்
இது. என குறிப்பிட்டுள்ளார்.
நேற்று தனது எக்ஸ் வலைதளத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த
ஜோதிமணி, இன்று கரூரில் நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவில்
பெண்களுடன் சேர்ந்து கும்மி அடித்துநடனமாடியது பேசுபொருளாகி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் விளக்கம் கேட்டபோது, பேட்டி அளிக்க
மறுத்துவிட்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam