Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 03 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்பதற்கு பதிலாக அரசு போக்குவரத்து கழகம் என்று மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்பு இருந்தது போன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இன்று பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறி நாம் தமிழர் கட்சியினர் அரசிற்கு தொடர்ந்து கோரிக்கையை வைத்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில், அரசு பேருந்துகளில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் என்பதற்கு முன்பு தமிழ்நாடு என்னும் ஸ்டிக்கரை,ஸ்பிரே அடித்து, ஒட்டுவதற்கு நாம் தமிழர் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் ஸ்டிக்கரோடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினரை அப்புறப்படுத்த முயன்றனர்.
இருப்பினும் கட்சியினர் ஒரு சில பேருந்துகளில் தமிழ்நாடு எனும் ஸ்டிக்கரை ஒட்டினர்.
அதனைப் பிரித்தெறிந்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN