Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 03 ஜனவரி (ஹி.ச.)
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை செல்லும் நீலகிரி மலை ரயில்
உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது விடுமுறை காலை சிறப்பு மலைரயிலும் தற்காலிகமாக தினசரி காலை 9.10 மணிக்கு கூடுதலாக
இயக்கப்படுகிறது.
மலை ரயில் கடந்து செல்லும் அடர்லி மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே பல்சக்கர தண்டவாள பாதையின் மீது பல இடங்களில் சிறிதும் பெரிதுமாக மண்சரிவுகள் ஏற்பட்டு தண்டவாளத்தின் மீது மண் சகதியும் பாறைகளும் விழுந்து கிடக்கும் நிலையில் அதனை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் முப்பதிற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
மண் சரிவுகளை சீரமைத்து சேதமடைந்த இருப்பு பாதைகளை மாற்றும் பணி நிறைவடையாத நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam