Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 03 ஜனவரி (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகர் 20வது தெருவில் வசிப்பவர் ஜெஃப்ரின் டேவிட்சன். இவர் கார் வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா வயது 27. இவர்கள் இருவரும் சாந்தி நகரில் வசித்து வருகிறார்கள்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஐந்து வயதில் ராய்சன் மற்றும் 9 மாத குழந்தை ஜூட் டேவிட்சன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளது. ஜெஃப்ரி டேவிட்சன் அடிக்கடி தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரியங்காவின் சொந்த ஊரான திசையன்விளை ரமத்புரம் பகுதியில் உள்ள நிலத்தை விற்பனை செய்து தனக்கு தொழில் தொடங்குவதற்காக பணம் வேண்டும் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் தொடர்ந்து பிரியங்காவை தொந்தரவு செய்ததால் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி இவர்களுக்கான திருமண நாள் அன்று, திடீரென பிரியங்கா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டேவிட்சன் பிரியங்காவின் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளார்.
இதனால் பதறிப் போன குடும்பத்தினர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவும், சாந்தி நகரில் மயக்க நிலையில் கடந்த பிரியங்காவை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
அப்போது அவரது கணவர் பிரியங்கா தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரியங்கா அனுமதித்த போது அங்கிருந்த மருத்துவர் இவர் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. யாரோ இவரது கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி செய்ததாக உறவினரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இன்று பிரியங்கா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பிரியங்காவின் உயிரிழப்பிற்கு மர்ம இருப்பதாகவும் அவரது கணவர் தொடர்ந்து அவரை சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மனைவியை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்தாரா அல்லது தற்கொலை தானா என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் காவல் நிலையம் முன்பாக அவரது குடும்பத்தினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Hindusthan Samachar / ANANDHAN