Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 03 ஜனவரி (ஹி.ச.)
புதுச்சேரி என்றாலே மதுபானத்திற்கு பெயர் பெற்றதாகும்.
இங்கு பலவிதமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் புதுச்சேரிக்கு வந்து மது குடிப்பது வழக்கம்.
சாதாரண நாட்களில் நாள் ஒன்று ரூபாய் 8 கோடிக்கு மது விற்பனை நடைபெறும்; வார இறுதி நாட்களில் அது சற்று உயரும்.
இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் மது பிரியர்கள் கடந்த 31ஆம் தேதி காலை முதல் புதுச்சேரியில் குவிந்தனர்.
இதன் காரணமாக மது விற்பனையும் போடு ஜோராக நடைபெற்றது.
மதுவிற்பனை இருமடங்காக உயர்ந்துள்ளது அதாவது கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ