விக்டோரியா பொது அரங்கத்திற்கான வாடகை - கட்டண விவரம் வெளியீடு!
சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.) சென்னையில் தொன்மையின் சின்னமாகத் திகழும் விக்டோரியா பொது அரங்கம் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 23.12.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த அரங்கத்தினை தினசரி காலை 8.30 மணி முதல் மால
விக்டோரியா பொது அரங்கத்திற்கான வாடகை - கட்டண விவரம் வெளியீடு


சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.)

சென்னையில் தொன்மையின் சின்னமாகத் திகழும் விக்டோரியா பொது அரங்கம் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 23.12.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த அரங்கத்தினை தினசரி காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 6 காட்சி நேரங்களில் (slots) அதாவது 8.30 மணி முதல் 6.30 மணி வரை, 10 மணி முதல் 11.30 மணி வரை, 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, 2 மணி முதல் 3.30 மணி வரை, 3.30 மணி முதல் 5 மணி வரை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் பதிவு செய்து பார்வையிடலாம்.

இதற்கான கட்டணம் இந்திய குடிமக்களுக்கு ரூபாய் 25/-, மாணவர்களுக்கு ரூபாய் 10/- (அடையாள அட்டை அவசியம்), மூத்த குடிமக்களுக்கு ரூபாய் 10/-, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூபாய் 50/- ஆகும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், பள்ளி மூலம் மின்னஞ்சல் வாயிலாக முன்பதிவு செய்யும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர்க்கும், மாற்றுதிறனாளிகளுக்கும் இலவசம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அரங்கத்திற்கான வாடகை - கட்டண விவரம் பின்வருமாறு:

1. கல்வி / அரசு / உள்ளூர் கலைஞர்கள் / புத்தக வெளியீடு / பாரம்பரிய நிகழ்வுகள் / பட்டிமன்றம் / கலந்துரையாடல் பிரதான அரங்கம் : ரூபாய் 50,000 /- (ஒரு நாள்) + மின்கட்டணம்

மேடை, கலைஞர் அறை (Green Room), முக்கிய பிரமுகர் அறை, அடிப்படை ஒளி மற்றும் ஒலி வசதிகள். பாதுகாப்புத் தொகை : ரூபாய் 25,000 /-

2. பன்னாட்டு நிறுவனங்கள் / வர்த்தக / சினிமா நிகழ்வுகள்

பிரதான அரங்கம் : ரூபாய் 1,00,000 + மின்கட்டணம்

மேடை, கலைஞர் அறை (Green Room),

முக்கியப் பிரமுகர் அறை, அடிப்படை ஒளி மற்றும் ஒலி வசதிகள் உட்பட பாதுகாப்புத் தொகை ரூபாய் 50,000 /-

திறந்த வெளி அரங்கம் (Amphitheatre) : நாள் ஒன்றுக்கு ரூபாய் 10,000 /- + மின்கட்டணம்.

என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b