Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 03 ஜனவரி (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், தனது கணவர் உடல்நிலை சரியில்லாததால் இறந்து விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மரியாரோசாரியோ என்பவரிடம் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது நந்தினிக்கும் மரியா ரோசாரியா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு வேறொரு கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரொசாரியா தாய் கிறிஸ்தவ மேரிக்கு தெரிய வர, தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மருமகளை சாங்கியம் செய்வதற்காக அழைத்துச் செல்வதாக மகனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பாத மனைவி குறித்து கேட்டபோது முன்னுக்கு பின்னாக தாய் பதில் அளித்த நிலையில், சந்தேகம் அடைந்த நந்தினியின் இரண்டாவது கணவர் ரொசாரியோ, நந்தினியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்ததாக தெரிகிறது.
இதனால் மரியா ரோசாரியோ சங்கராபுரம் காவல் நிலையத்தில், தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
புகாரைப் பெற்ற காவல்துறையினர் முதற்கட்டமாக மருமகளை அழைத்துச் சென்ற மாமியார் கிறிஸ்தோப் மேரியை கைது செய்து போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
இந்த விசாரணையில் நந்தினியை சாங்கியம் செய்வதற்காக சோழம்பட்டு மணி நதி கரைக்கு அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்து அங்கேயே புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினியின் உடலை தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN