Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 03 ஜனவரி (ஹி.ச.)
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை பேசியபோது கூறியதாவது;
திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான்.
தமிழ்நாட்டில் தமிழ் படிக்கவோ பேசவோ எழுதுவோ வராதவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் மொழி கலை இலக்கியம் வரலாறு அரசியல் என தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது.
இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுட சொன்னவர் ஈவேரா.
தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இந்தி உள்ளது இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நாடகம் தான்.
திருமாவளவன் தேவைக்கேற்ப மாற்றி மாற்றி பேசுகிறார்.
பொங்கலுக்கு இலவச பரிசு பொருட்கள் தருவது கேவலமான ஒன்று. அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை.
போராடக்கூடிய ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது கொடுந்துயரம். ஆசிரியர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள்.
மதுவுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை ஆசிரியர்களுக்கு கொடுப்பதில்லை.
எல்லாத் துறையை சேர்ந்தவர்களும் வீதிக்கு வந்து போராடும் நிலையிலும் நாங்கள் நல்ல ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம் என கூறி வருகிறார்கள்.
திமுக அதிமுகவிற்கு இடையே தான் போட்டி என்கிறார்கள் யார் அதிகமாக நாட்டை நாசப்படுத்துவது என்பதில் தான் போட்டி.
தமிழ்நாட்டிற்கு ஆயிரம் அமித்சாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது.
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராடுவதற்கு காரணம் அவர்களே தான் அவர்கள் தான் இந்த ஆட்சியை கொண்டு வந்தார்கள்.
அவர்கள் நினைத்திருந்தால் இந்த அரசு அமையாமல் தடுத்திருக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ