பொங்கல் வருவதற்குள் பெரிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் - செங்கோட்டையன்
ஈரோடு, 03 ஜனவரி (ஹி.ச.) தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியா
செங்கோட்டையன்


ஈரோடு, 03 ஜனவரி (ஹி.ச.)

தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வீரமங்கை வேலு நாச்சியாரின்

பிறந்தநாளில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தெரிவித்ததாவது:

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296வது பிறந்த நாளை தவெக சார்பில், தலைவரின்

கட்டளைப்படி தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக மலர் தூவி மரியாதை செலுத்தும்

நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

சிவகங்கை ஆண்ட வேலுநாச்சியார் வரலாற்று சிறப்புமிக்கவர். தேசிய தலைவராக விளங்கியவர். ஆங்கிலேயன் ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி கண்டவர். அப்படிப்பட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரரை கொள்கை தலைவராக ஏற்று அதற்கான சிறப்புகளையும்

அங்கீகாரத்தையும் வழங்குகிறோம்.

நேற்றைய ஆய்வின்படி

தவெக.வை 10க்கு 8 பேர் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளில் தலைசிறந்தவராக முன்னணியில் நிற்கிறார் விஜய். வருகின்ற

தேர்தலில் மக்களால் மக்களாட்சி மலர்கின்ற ஒரு நல்லாட்சியை அவர் வழங்குவார்.

வெற்றி என்ற இலக்கை உருவாக்கும் காலம் நேற்று முன்தினம் ஒன்றாம் தேதி தொடங்கி இருக்கிறது 2026 தமிழகத்தில் ஒரு மாற்றத்தையும் புதிய அத்தியாயத்தையும்

உருவாக்குவோம்.

தவெக சார்பில் விருப்ப மனு பெறுவது குறித்து தலைவர் முடிவு செய்வார்.

எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் அரசு ஊழியரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக

தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். திமுக பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி தந்தார்கள் இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை இதன் காரணமாக போராட்டம் வலுவடைந்துள்ளது.

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக வெற்றி

கழகத்தில் இணையக்கூடிய நிகழ்வு பொங்கலுக்குள் நடைபெறும்.

தவெக- காங்கிரஸ், கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு ஒவ்வொரு இயக்கமும் கூட்டணி

சேர்வது அவர்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்று இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் தான் தவெக கூட்டணி கட்சிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறதா.?

கூட்டணிக்கு விருப்பமுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அதை தலைவர் முடிவு செய்வார்.

ஓபிஎஸ் அணியிலிருந்து பிரபாகர் இணைந்துள்ளார் மற்றவர்கள் எப்போது

இணைகிறார்கள்.? இது பொங்கலுக்குள் தெரியவரும்.

விஜயை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளக்கூடிய யாராக இருந்தாலும் அவர்களை கூட்டணியில் சேர்ப்போம் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

ஓபிஎஸ் டிடிவி இன்னும் அதிமுகவை ஒருங்கிணைப்போம் என சொல்லி வருகிறார்கள்.?

அது சாத்தியமா? பொறுத்திருந்து பாருங்கள் எப்படி இணையப் போகிறார்கள் யாருடன்

இணையப் போகிறார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

காங்கிரஸ் தமிழக வெற்றி கழகம் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா.? யார் வேண்டுமானாலும் கருத்துக்கள் பரிமாறலாம் பேச்சுவார்த்தை என்பது தலைவரோடு கலந்து பேசுவது தான் பேச்சு வார்த்தையாக இருக்கும் அதை பொறுத்திருந்து

பாருங்கள்.

கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தரப்படுமா.?

இப்போது அதற்கு பதில் சொல்ல இயலாது.

அதிமுக களத்தில் இருக்கிறதா தவெக- திமுக மட்டும்தான் களத்தில் இருக்கிறதா.?

இரண்டு கட்சிகளும் தாக்கக்கூடிய கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் இருக்கிறது காய்க்கும் மரத்தில் கல்லடி படுவது போல வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டு

இருக்கிறது. இரண்டு கட்சிகளும் எங்களை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்

எதிர்க்கட்சி ஆளும் கட்சியை தாக்குவதில்லை ஆளும் கட்சி குறைபாடுகளை

சொல்வதில்லை எல்லோரும் ஒருமுகமாக தமிழக வெற்றி கழகத்தை தாக்குகிறார்கள் ஆகவே

மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் என்ற முறையில் தவெக. வை விமர்சனம்

செய்கிறார்கள்.

தேர்தலையே சந்திக்காத தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை எவ்வாறு

பயிற்சிப்படுத்துவீர்கள்.?.

நீங்கள் எல்லாம் தொலைக்காட்சியில் சேர்ந்த போது எவ்வாறு பயிற்சி பெற்றீர்களோ

அதுபோலத்தான் என நகைச்சுவையுடன் பதிலளித்துவிட்டு புறப்பட்டார்.

Hindusthan Samachar / P YUVARAJ