Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகையின் போது ஏற்படும் கூடுதல் பயணிகள் கூட்டத்தைக் கையாள சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
1. நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06012) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06011) வருகிற 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) தாம்பரத்தில் இருந்து இரவு 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
2. கன்னியாகுமரியில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06054) வருகிற 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06053) வருகிற 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) தாம்பரத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி வந்துசேரும்.
3. திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06156) வருகிற 09 மற்றும் 16 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06055) வருகிற 09 மற்றும் 16 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.
4. திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06158) வருகிற 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06057) வருகிற 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) செங்கல்பட்டில் இருந்து மதியம் 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.
5. கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06034) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06033) வருகிற 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9 மணிக்கு கோயம்புத்தூர் வந்துசேரும்.
6. போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06024) வருகிற 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) போத்தனூரில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06023) வருகிற 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.15 மணிக்கு போத்தனூர் வந்துசேரும்.
7. திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06070) வருகிற 08ம் தேதி அன்று (வியாழக்கிழமை) திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06069) வருகிற 09 ம் தேதி அன்று (வெள்ளிக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை திருநெல்வேலி வந்து சேரும்.
8. ஈரோட்டில் இருந்து செங்கோட்டை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06025) வருகிற 13 ம் தேதி அன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோட்டில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06026) வருகிற 14ம் தேதி அன்று (புதன்கிழமை) செங்கோட்டையில் இருந்து இரவு 8.45 மணிக்கு போத்தனூர் புறப்பட்டும்.
9. ராமேசுவரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06106) வருகிற 13 மற்றும் 20 ஆம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) ராமேசுவரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06105) வருகிற 14 மற்றும் 21 ஆம் தேதிகளில் (புதன்கிழமை) தாம்பரத்தில் இருந்து மதியம்ன் 2 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
10. மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06125) வருகிற 13ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மங்களூரில் இருந்து அதிகாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06105) வருகிற 14 ம் தேதி (புதன்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 4.15 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு வந்து சேரும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b