Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 03 ஜனவரி (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி
பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி
கோவிலில் நள்ளிரவில் தனது தாய் தந்தையரை பிரிந்து செல்லும் சப்தா வர்ணக் காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி
தரிசனம் செய்தனர் .
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திருவிழா நாள்களில்
தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. சுவாமியை பல வண்ண மலர்களால் அலங்கரித்து மேளதாளங்கள் முழங்க திரு வீதி உலா
வந்து பக்தர்களுக்கு காலை, மாலை வேளைகளில் அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும்
நடைபெற்று வருகிறது.
மூன்றாம் திருவிழா அன்று இரவு மக்கள்மார் சந்திப்பு
நிகழ்ச்சி , ஐந்தாம் திருவிழா அன்று காலை கருட தரிசன நிகழ்ச்சியும்
நடைபெற்றது. விழாவில் ஒன்பதாம் திருவிழாவான நேற்று காலை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 11 - மணிக்கு சுவாமிகள் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு ரத வீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து விட்டு திரும்பி கோவில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக வந்து தனது தாய் தந்தையர்களின் திருவிழாவில் பங்கெடுத்துக் கொள்ள வருகை தந்த கோட்டாறு
வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி , வேளிமலை குமாரசுவாமி ஆகிய மூன்று பேரும் தங்களது தாய் தந்தையரை மூன்று முறை சுற்றி வலம் வந்தனர் .
அப்போது திரண்டு இருந்த பக்தர்கள் பூக்களை தூவி வரவேற்றனர். பின்பு சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
சுவாமியை தாலாட்டி கோயிலுக்குள்
அழைத்து சென்ற பின்னர் இரண்டு முருகரும் ஒரு விநாயகரும் பிரிந்து செல்லும் சப்தா வர்ணக் காட்சி நடைபெற்றது.
இந்த
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam