திருவண்ணாமலையில் மார்கழி மாத பௌர்ணமியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை, 03 ஜனவரி (ஹி.ச.) திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கி
அண்ணாமலையார்


திருவண்ணாமலை, 03 ஜனவரி (ஹி.ச.)

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

அதன்படி பவுர்ணமி இன்று மாலை 6.11 மணிக்கு தொடங்கி நாளை மாலை 04.08 வரை உள்ளது. இந்த நேரம் கிரிவலம் செல்ல உகந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மார்கழி பௌர்ணமியில் கிரிவலம் இரவு முழுவதும் கடும் குளிரையும்

பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam