Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 03 ஜனவரி (ஹி.ச.)
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக கட்சி அலுவலகம் அடிக்கல்
நாட்டு விழாவிற்கு பங்கேற்க மேட்டுப்பாளையம் வந்திருந்த செங்கோட்டையன்
செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் 2026 சட்டமன்ற தேர்தலில் இங்கு த.வெ.க சார்பில் யார்
பேட்டியிட்டாலும் வெற்றி பெறுவர்.
என்னை அதிமுக விலிருந்து தூக்கி எறிந்து
பின்பு என்னை தாங்கி பிடித்த இயக்கம் கருர் சம்பவத்திற்கு அவரது பிரச்சாரம் எப்படி அமைய இருக்கும் என்று அனைவரும் பார்த்தார்கள், ஆனால் புதுச்சேரி
தமிழ்நாட்டிலும் எல்லோரும் வியக்கதக்க வகையில் அமைந்தது.
மலேசியா சென்ற போது உலக தலைவர்களுக்கு கொடுத்தது போல் விஜய்க்கு வரவேற்பு
கொடுக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் திமுக அதிமுக தவிர்த்து விஜயை முதல்வர் ஆக்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தில் சிறந்த ஆட்சி வேண்டும் அனைவரும் விரும்புகிறார்கள்.
காங்கிரஸில் ஏற்பட்டுள்ற குழப்பத்திற்கு த.வெ.க காரணம் இல்லை.
விஜயை யார் முதலமைச்சர் என்று ஏற்றுகொள்ளுகிறார்களோ அவர்களுடன் கூட்டணி.
புதிய ஆட்சி த.வெ.க ஆட்சி வந்து பின்பு போதை பொருள் தடுப்பு மிக கடுமையாக இருக்கும் 72யில் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது 100 நாட்கள் கூடாது இருக்காது என்று கூறினார் அதே போல் தான் தவெக வையும் கூறுகிறார்கள்.
தினகரன்
மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தவெக விற்கு வர வாய்ப்புள்ளது.கொங்கு
மண்டலத்தில் 100 க்கு 99 வது த.வெ.க வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ