மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்
சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.) விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த தினம் இன்று (ஜனவரி 03) அனுஷ்டிக்கப்படுகிறது. இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று (ஜனவரி 03) எக்ஸ் தளத்தில் பதிவிட்டிர
மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்


சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.)

விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த தினம் இன்று

(ஜனவரி 03) அனுஷ்டிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று (ஜனவரி 03) எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்த மாவீரரும், பாஞ்சாலங்குறிச்சியை திறம்பட ஆட்சி செய்த பாளையக்கார மன்னருமான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த தினம் இன்று.

ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்து, பிற மன்னர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததோடு, தன் இறுதி மூச்சு வரை தாய் மண்ணையும், நாட்டு மக்களையும் அரண்போல காத்திட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b