Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 03 ஜனவரி (ஹி.ச.)
வேலு நாச்சியாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவதில் பெருமை என வேலு நாச்சியாரின் பிறந்தநாள் இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.
ராணி வேலுநாச்சியார் அவர்களது பிறந்த தினமான இன்று,அவரது வீரத்தை போற்றுவோம்,ஒப்பற்ற வீரம். தியாகம்.அசைக்க முடியாத மன உறுதியை கொண்டிருந்த வேலு நாச்சியார் அவர்களது சரித்திரம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி எதிர்த்த முதல் இந்திய ராணியான இவர் சுயமரியாதையும், பொறுப்புணர்வும் கொண்ட போராட்டத்தை முன்னெடுத்தார்.
மக்களின் நலன் காத்த அரசியாகவும், தொலைநோக்கு பார்வை
கொண்டவராகவும் விளங்கிய இவர், அநியாயத்திற்கும், அடக்குமுறைக்கும் எதிராக அதிகாரம் செலுத்துதல் மட்டுமல்ல, துணிச்சலுடன் முன்னின்று போராடுவது தான்.
உண்மையான தலைமைத்துவம் என்பதை வாழ்ந்து காட்டினார்.
வீரமங்கை ராணி வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கை இன்னும் பல தலைமுறைக்கு நம்மை ஊக்குவிக்கும்.
இந்நாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவதில் பெருமை கொள்கிறேன்
இவ்வாறு ராஜ்நாத் சிங் அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / Durai.J