தமிழகத்தின் ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்குப் பணிவான அஞ்சலிகள் - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி
புதுடெல்லி, 03 ஜனவரி (ஹி.ச.) ஆங்கிலேயே ஆட்சியிலிருந்து இந்திய தேசம் விடுதலை பெறுவதற்காக வித்திட்ட முதல் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்த நாள் இன்று (ஜனவரி 03) அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைக
தமிழகத்தின் ராணி  வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்குப் பணிவான அஞ்சலிகள் - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி


புதுடெல்லி, 03 ஜனவரி (ஹி.ச.)

ஆங்கிலேயே ஆட்சியிலிருந்து இந்திய தேசம் விடுதலை பெறுவதற்காக வித்திட்ட முதல் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்த நாள் இன்று (ஜனவரி 03) அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவர் வேலுநாச்சியார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

அவரை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியும் ராணி வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் இன்று (ஜனவரி 03) கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டின் ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்குப் பணிவான அஞ்சலிகள்.

அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடினார்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட முதல் இந்திய ராணிகளில் அவரும் ஒருவர்.

அவரது துணிச்சல், தலைமைத்துவம் மற்றும் தியாகம் ஆகியவை தலைமுறைகளுக்குத் தலைமுறை ஊக்கமளித்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Hindusthan Samachar / vidya.b