Enter your Email Address to subscribe to our newsletters

வாராணசி, 04 ஜனவரி (ஹி.ச.)
உத்தரபிரதேச மாநிலம் வாராணசியிலுள்ள டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு மைதானத்தில் 72-வது தேசிய வாலிபால் போட்டி இன்று (ஜனவரி 4-ம் தேதி) முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் நிறுவனப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 58 அணிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்தபடி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு தொடர்பான அதிகாரிகள் கூறுகையில்,
இப்போட்டி இந்திய கைப்பந்து விளையாட்டில் வளர்ந்து வரும் மற்றும் ஏற்கனவே உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதோடு, உயர் மட்ட போட்டித்திறனையும் விளையாட்டு உணர்வையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினர்.
.
Hindusthan Samachar / vidya.b