Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 04 ஜனவரி (ஹி.ச.)
ஈரோட்டில் பாஜக வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
ஈரோட்டில் நடைபெற்று வரும் விவசாய கண்காட்சிக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்ள உள்ளார்.
மஞ்சள் விவசாயிகளிடம் கலந்துரையாட உள்ளார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சியில் நடைபெறும் நிலையில் மாநாட்டில் பொங்கல் விழா நடைபெற உள்ளது.
இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார் அதனைத் தொடர்ந்து திருச்சி நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் கலந்து கொள்கிறார்.
2021 தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகள் முன்வைத்த திமுக அரசு தமிழகத்தில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சத்துணவு ஊழியர்கள்,பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகம் தான் அதிகமான கடன் கொண்ட மாநிலம். தமிழக மக்களை அரசு ஏமாற்றிக் கொண்டு உள்ளது. இந்த அரசின் நிர்வாகத்தில், சட்ட ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை போன்ற சூழல் உள்ளது.
தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் பெருக்கெடுத்து உள்ளது, சிறுவர்கள் சீரழிந்து வருகின்றனர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வானதி சீனிவாசன் முன்வைத்தார்.
100-நாள் வேலையில் ஆளே இல்லாமல் ஜாப் கார்ட் போடுவது போன்ற முறைகேடுகள் நடைபெறுகிறது.
பொங்கல் பரிசு வாங்குவதில் ஊழல் என பல்வேறு தரப்பினர் திமுக அரசு மேல் குற்றச்சாட்டு இருக்கின்றனர் இந்த முறையாவது தரமான பொருட்கள் தருவார்கள் என மக்கள் எதிர்பார்ப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN