அமெரிக்க படையினரால் வெனிசுலா அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டதற்கு சீனா கண்டனம்
சீனா, 4 ஜனவரி (ஹி.ச.) வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை சர்வதேச சட்டங்களையும் வெனிசுலா நாட்டின் இறையாண்மையைய
அமெரிக்க படையினரால் வெனிசுலா அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டதற்கு சீனா கண்டனம்


சீனா, 4 ஜனவரி (ஹி.ச.)

வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை சர்வதேச சட்டங்களையும் வெனிசுலா நாட்டின் இறையாண்மையையும் மீறுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஐநா பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடந்துள்ள நிகழ்வுகள் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

ஐநா விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முழுமையான மரியாதை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி உள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM