Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜனவரி (ஹி.ச)
மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் படத்திறப்பு நிகழ்ச்சியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.
இந்நிலையில் இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
சிகரங்களைத் தொட்டபோதும் simplicity-யே தன் அடையாளம் என வாழ்ந்த 'உயர்ந்த உள்ளம்' ஏ.வி.எம். சரவணன்
உடையால் மட்டுமல்ல, உள்ளத்தாலும் தூய்மையானவராக வாழ்ந்து காட்டிய சாதனையாளர்தான் ஏவிஎம் சரவணன் அவர்கள். தந்தை சம்பாதித்த பெயரைக் காப்பாற்றிய மகனாக, அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையைப் பெற்ற தயாரிப்பாளராகத் தமிழ்த் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றும் போற்றுதலுடன் நினைவுகூரப்படும்
எங்கள் குடும்ப நண்பராக மாசற்ற அன்பு பாராட்டிய ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கு என் புகழஞ்சலி என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ