மதுபோதையில் சாக்கடையில் தவறி விழுந்த தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு
திருப்பூர், 04 ஜனவரி (‌ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தேவி (32). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வழக்கம்போல்
Death


திருப்பூர், 04 ஜனவரி (‌ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி தேவி (32). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சுரேஷ் அலங்கியத்திலிருந்து பஸ்சில் புறப்பட்டு தாராபுரம் சென்றுள்ளார்.

அங்கு சிக்னல் அருகே பஸ்சிலிருந்து இறங்கிய அவர், மின் மயானம் அருகே உள்ள திட்டில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

மது போதையில் இருந்த சுரேஷ் அருகில் இருந்த திறந்த சாக்கடைக்குள் தவறி விழுந்ததாக தெரிகிறது. இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தின் ஒரே ஆதாரமான சுரேஷ் உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN