Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 04 ஜனவரி (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே இயங்கி வரும் மதுபான கடையால் அந்த பகுதியில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகளும் மீனவ பொதுமக்களும் ஏராளமானோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குடிபோதை ஆசாமிகள் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு அமைதியை குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். என்பதால் ஏர்வாடி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும், அங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்களும் இந்து முன்னணி அமைப்பினரும் சேர்ந்து ஏர்வாடி டாஸ்மாக் மதுக்கடை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏர்வாடி ஆர்ச் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்த அவர்களை போலீசார் வழிமறித்து தடுத்தனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தரதரவென இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றி கைது செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN