Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 04 ஜனவரி (ஹி.ச.)
திருவண்ணாமலை அடுத்த மெய்யூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன பன்னோக்கு அரங்க கட்டிடத்திற்காக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு,
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் புதியதாக நவீன பன்னோக்கு அரங்கம் கட்டிடம் அமைய உள்ளது.
இந்த கட்டிடத்தில் திருமண மண்டபம், சமையலறை, உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய நான்கு கோடி மதிப்பீட்டில் தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் தான் கிராமப்புறம் மற்றும் கிராமப்புற வீடுகளை நோக்கி பல்வேறு திட்டங்கள் வருகின்றது. இதன் காரணமாகத்தான் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினினை ஆதரிப்பதில் ஆண்களை விட, பெண்கள் தான் முன்னிலையில் உள்ளனர்.
மீண்டும் திமுக ஆட்சி வெற்றி பெற்று மு. க. ஸ்டாலின் முதலமைச்சராக அமர நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
எனக் கேட்டு கொண்டார்.
Hindusthan Samachar / ANANDHAN