டிரோன் மூலம் புலியை கண்காணிக்கும் வனத்துறை - மக்களுக்கு எச்சரிக்கை!
நீலகிரி, 04 ஜனவரி (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள போர்த்தி ஆடா கிராமத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் காலை முதல் புலி ஒன்று காலில் காயங்களுடன் எங்கும் செல்லாமல் தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருக்கிறது. இந்த புலி இரவு நேரத்தில் குடி
Tiger


நீலகிரி, 04 ஜனவரி (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள போர்த்தி ஆடா கிராமத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் காலை முதல் புலி ஒன்று காலில் காயங்களுடன் எங்கும் செல்லாமல் தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருக்கிறது.

இந்த புலி இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் செல்லாமல் இருப்பதற்காக கடும் குளிரில் மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பேரில் வன சரகர் கிருஷ்ணகுமார் தலைமையில் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

அப்போது புலி தேயிலைத் தோட்டத்தில் இருப்பதை உறுதி செய்ய ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரவு AI தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் புலி தேயிலைத் தோட்டத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.

அதேபோல பகல் நேரங்களிலும் புலி தேயிலை தோட்டத்தில் புலி படுத்திருப்பதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இன்று காலை கண்காணித்த போது நேற்று படுத்திருந்த இடத்தில் இருந்து சற்று தூரம் நடந்து சென்று வேறு ஒரு இடத்தில் படுத்திருப்பதையும் வனத்துறையினர் உறுதி செய்தி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இருப்பினும் இன்றும் தேயிலை தோட்டம் மற்றும் மலை காய்கறி தோட்டத்திற்கு பணிக்கு செல்ல வேண்டாம், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN