பொங்கல் பரிசுத் தொகுப்பு 3 ஆயிரம் ரூபாய் - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.) பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ 3000 வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த
பொங்கல் பரிசு


சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.)

பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு

பொங்கல் பரிசாக ரூ 3000 வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் ஜனவரி 8 -ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படு வருகிறது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது.

இதனை அடுத்து, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அடுத்தடுத்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, முழு கரும்பு, சர்க்கை உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1,000 வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு ரொக்க பணம் வழங்கப்படவில்லை.

இதனால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், 2026 பொங்கல் பண்டிகைக்கு கட்டாயம் பொங்கல் பரிசுடன் ரொக்க பணம் வழங்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால், எவ்வளவு அரசு கொடுக்கும் என கேள்வி எழுந்து இருந்தது. அண்மையில் பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, கரும்பு, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இன்று பொங்கல் பண்டிகைக்கு ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam