பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடக்கம்
சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.) பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட முதல்வர் ஸ்டாலின் இன
பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடக்கம்


சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.)

பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 04) ஆணையிட்டுள்ளார்.

அதன்படி, 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்பட இருக்கிறது.

மேலும் ரூ3 ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ரூ.6936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கப்பட இருக்கிறது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

வரும் 8ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை மற்றும் ரூ.3,000 ரொக்க பரிசு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.

அன்றைய தினம் முதல், வரும் 14ம் தேதி வரை ரேஷன் கடைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 400 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

இந்தநிலையில், ரூ.3,000ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 04) முதல் தொடங்கி உள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்து வருகிறார்கள்.

Hindusthan Samachar / vidya.b