தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நாளை முதல் ஜனவரி 9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.) தமிழகத்தில் சில இடங்களில், நாளை (ஜனவரி 05) முதல், வரும் 9ம் தேதி வரை, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஓரிரு இடங்களி
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நாளை முதல் ஜனவரி 9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.)

தமிழகத்தில் சில இடங்களில், நாளை (ஜனவரி 05) முதல், வரும் 9ம் தேதி வரை, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், கடந்த 24 மணி நேரத்தில், மழை பெய்துள்ளது. நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவு பெற்ற, 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

தற்போது, தெற்கு கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதேபோல், தென் கிழக்கு மற்றும் அதை ஒட் டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை

( ஜனவரி 05) முதல் வரும் 9ம் தேதி வரை, சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உண்டு.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில், குறைந்தபட்ச வெப்ப நிலை, சில இடங்களில், ஜனவரி 7 வரை, 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை, படிப்படியாக குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b