Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 04 ஜனவரி (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள
தாயில்பட்டி ஊராட்சி ராமலிங்கபுரத்தில் ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆருத்ர தரிசன விழாவினை முன்னிட்டு சௌடாம்பிகை அம்மன் அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் ஊர்வலம் ராமலிங்கபுரம், கோட்டையூர், தாயில்பட்டி பஸ் ஸ்டாண்ட், பச்சையாபுரம், உள்ளிட்ட முக்கிய ரதவீதியின் வழியாக சப்பரம் வலம் வந்தது.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கலந்து கொண்ட பக்தர்களுக்கு நிர்வாக கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
அதேபோல் பச்சையாபும் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவாதிரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நடராஜர், பிள்ளையார், பூ சப்பரத்திலும், முருகன் அன்னபட்ஷி வாகனத்திலும், ஸ்ரீ பத்ரகாளி அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தனித்தனியாக மூன்று வாகனங்களிலும் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பத்திரகாளி அம்மனுக்கு பால், பன்னீர்,பஞ்சாமிர்தம், உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / Durai.J