பிராட்வே பேருந்து முனையத்தில் மறுசீரமைப்பு பணிகள் - ஜனவரி 7 ஆம் தேதி முதல் பேருந்து சேவையில் தற்காலிக மாற்றம்
சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.) பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், 07.01.2026 முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் இராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட
பிராட்வே பேருந்து முனையத்தில் மறுசீரமைப்பு பணிகள் - ஜனவரி 7 ஆம் தேதி முதல் பேருந்து சேவையில் தற்காலிக மாற்றம்


சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.)

பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், 07.01.2026 முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் இராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்து கழகமான எம்டிசி தெரிவித்துள்ளது.

அதன்படி, இராயபுரம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு:

காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் தடங்கள்: 6, 13, 60E, 102, 109, 102C, 102K, 102P, 102S, 102X, 109A, 109X, 21G, 21L, 21E ET

அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் தடங்கள்: 11, 21, 26, 52, 54, 60, 10E, 11G, 11M, 155A, 17E, 17K, 188C, 188ET, 18A, 18A CUT, 18B, 18D, 18E, 18K, 18P, 18R, 18RX, 18X, 21C, 26B, 26G, 26K, 26M, 26R, 51D, 51J, 52B, 52G, 52K, 54G, 54L, 5C, 60A, 60D, 60G, 60H, 88C, 88K, 88K ET, 9M ET, A51, D51 ET, E18, E51, M51R

ஈவேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 50, 101CT, 101X, 53E, 53பி

அண்ணாசாலை மற்றும் ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தட பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து இராயபுரம் நோக்கி செல்லும் போது North Fort சாலையில் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி இராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.

அதே போல் காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து பாரிஸ் கார்னர் சிக்னல் இடதுபுறம் திரும்பி NSC Bose சாலை மற்றும் Esplanade சாலையில் வந்து North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி மீண்டும் பாரிஸ் கார்னர் வழியாக இராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்,

இராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து ஈ.வே.ரா சாலை மற்றும் அண்ணாசலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு எதிர்புறத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

அதே போல் காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலை வலதுபுறம் திரும்பி Esplanade சாலையில் இராஜா அண்ணாமலை மன்றம் அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி மீண்டும் பாரிஸ் கார்னர் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

தீவுத்திடல் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு: பீச் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 1, 4, 44, 330, 33L, 38A, 38G, 38H, 44C, 44CT, 4M, 56D, 56D ET, 56J, 56K, 56P, 57D, 57F, 57H, 57J, 57M, 8B, C56C, C56C ET, 557A ET.

மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 33B, 56C, 56F. ஈவேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: : 15, 20, 15F, 15G, 17D, 20A, 20D, 50ET, 50M, 71D, 71E, 71H, 71V, 120, 120CT, 120F, 120G, 120K, 150

வேப்பேரி ஈவேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 35, 42, 242, 142B, 142P, 35C, 42B, 420, 42D, 42M, 640, 64K, 64K ET, 7E, 7H, 7K, 7M, 7M ET

பீச் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு எதிர்புறத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது Esplanade சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி சாலையில் Fort station-ல் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும். ஈ.வே.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, இராஜா அண்ணாமலை மன்றம் முன்பு இடது புறம் திரும்பி TNPSC சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி TNPSC சாலை மற்றும் Evening Bazaar வழியாக, மீண்டும் ஈ.வே.ரா. சாலை வந்தடைந்து முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும் தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து பீச் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று வலது புறம் திரும்பி North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

அதே போல் ஈ.வே.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று இராஜா அண்ணாமலை மன்றம் முன்பு பயணிகளை ஏற்றி Esplande சாலை வழியாக NSC Bose சாலையில் உள்ள சிக்னல் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி Evening Bazaar வழியாக அதன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்

என சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b