Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி,4 ஜனவரி (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி இந்திய குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை காண வெளிநாட்டு விருந்தினர்களை வரவழைப்பது வழக்கம்.
மேலும் பொதுமக்களும் விழாவில் பங்கேற்கும் வகையில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.
இந்த ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை (5-ம் தேதி) துவங்குகிறது. வரும் 14-ம் தேதி வரையில் அல்லது டிக்கெட்டுகள் முன்கூட்டியே தீரும் வரையில் காலை 10 மணி முதல் ஒரு மணி வரையிலும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் விற்பனை செய்யப்படும்.
டிக்கெட்டுகளை பெற விரும்புவோர் www.aamantran.mod.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஒரிஜினல் போட்டோ, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே பெற முடியும்.
தேசிய ஒற்றுமையின் அடையாளமாகத் திகழும் இவ்விழாவில் நடைபெறும் அலங்கார ஊர்திகள், விமானங்களின் சாகசங்கள், பீட்டிங் ரிட்ரீட் விழா மற்றும் படைகள் பாசறைக்கு திரும்பி செல்லும் விழா, இராணுவத் திறமை, கலாச்சாரச் செழுமை மற்றும் அரசியலமைப்புப் பெருமையின் ஒரு திகைப்பூட்டும் காட்சி உள்ளிட்டவைகளை இந்த டிக்கெட்டுகள் மூலம், நேரிடையாக கண்டுகளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM