Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 04 ஜனவரி (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாதக நிர்வாகிகள் ஆலோசனை
கூட்டத்திற்கு பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்யவே அரசு
ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு என்றும் இது ஏற்கனவே உள்ள கடன் சுமையை மேலும்
அதிகரிக்கும் என்றும் குற்றம் சாட்டினார்.
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியது
மகிழ்ச்சி என்றாலும் ஜாக்டோ ஜியோ வலுவான அமைப்பாகவும் பல லட்சம் வாக்குகள் இருப்பதாலும்
அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுள்ளதாக விமர்சித்தார்.
அதே நேரம் சம ஊதியம் கேட்டு போராடும் ஆசிரியர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு வலுவான அமைப்பு இல்லாததால் அவர்களுடைய கோரிக்கையை
அரசு ஏற்காது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மோடி பொங்கல் என்று கூறினால் ஓடிப் போங்கள் என்று கூற
வேண்டியதுதான் என்றார்.
கருத்துக்கணிப்பு மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றவர் இது கருத்து திணிப்பு என சாடினார்.
நாங்கள் வாங்கும் வாக்கு மட்டுமே உண்மையான வாக்கு மற்ற கட்சி நிர்வாகம்
வாக்கில் அனைத்தும் பணம் கொடுத்து வாங்கும் வாக்கு என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில பங்கு உள்ள போது விஜய் ஆட்சியில் பங்கு என அறிவிப்பது தவறு இல்லை என்றார். மேலும் இது விஜயின்
பெருந்தன்மையை காட்டுவதாகவும் அவர் வரவேற்பு தெரிவித்தார்.
2026 தேர்தல் எங்களுக்கு எந்த சவாலும் இல்லை என்றதோடு, பொதுத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரை நிறுத்தி திமுக வென்று காட்டுமா?என சவால் விடுத்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam