டெல்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதல் வழக்கு என்.ஐ.ஏ.,யிடம் ஒப்படைப்பு
அகமதாபாத்,4 ஜனவரி (ஹி.ச.) டெல்லி செங்கோட்டை அருகே, கடந்த நவம்பர் 10ல் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த டாக்டர் அகமது மொய்தீன் சையத் என்பவர் நாட்டின் பல்வேறு ம
டெல்லி செங்கோட்டை அருகே  நடந்த தற்கொலைப் படை தாக்குதல் வழக்கு என்.ஐ.ஏ.,யிடம் ஒப்படைப்பு


அகமதாபாத்,4 ஜனவரி (ஹி.ச.)

டெல்லி செங்கோட்டை அருகே, கடந்த நவம்பர் 10ல் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த டாக்டர் அகமது மொய்தீன் சையத் என்பவர் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி வருவதாகவும், அவர் அகமதாபாத் வந்திருப்பதாகவும் குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீசாருக்கு தெரிய வந்தது.

வாகன சோதனையில், துப்பாக்கிகள் மற்றும் 'ரைசின்' எனும் விஷத்தை தயாரிக்க தேவையான ஆமணக்கு எண்ணெய் கொண்டு வந்த டாக்டர் சையதை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ஆப்கனை சேர்ந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM