Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 04 ஜனவரி (ஹி.ச.)
1879 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் திருச்சூழி கிராமத்தில் மார்கழி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீ ரமண பகவான், திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் கிரிவலப் பாதையில் ஸ்ரீ ரமண பகவானின் ரமணாசிரமம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரமண பகவானுக்கு மார்கழி மாத புனர்பூச நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி 146 வது ஜெயந்தி விழா இன்று ரமண மகரிஷி ஆசிரமத்தில் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்றது.
முன்னதாக மங்கள இசையுடன் தொடங்கிய ஜெயந்தி விழாவில் ரமண பகவானுக்கு ஆசிரமத்தில் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுத்து வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ரமண பகவானுக்கு பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இந்த ரமண ஜெயந்தி விழாவில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு அற்புதம் அற்புதம் அற்புதமே என்று ரமண பகவானுக்காக பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தார்.
Hindusthan Samachar / ANANDHAN