Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 04 ஜனவரி (ஹி.ச.)
புதுக்கோட்டையில் இன்று மாலை நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள உள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,
ஜார்ஜ் கோட்டையை பிடிக்கப் போவதால் புதுக்கோட்டை விழாக்கோலம் பூண்டி உள்ளது. புதுக்கோட்டையில் ஜார்ஜ் கோட்டையை பிரிப்பதற்கான யூகத்தை வகுக்க போகிறோம்.
தொடர்ந்து தமிழக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. உச்சபட்ச ஏமாற்றமாக தேர்தல் ஸ்டேன்ட்டாக நேற்று புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளார்கள். தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய திட்டம் பழைய மந்தையில் புதிய கல்.
நிதி பற்றாக்குறையில் தமிழகம் தள்ளாடுகிறது. அதிக அளவு கடன் வாங்கியுள்ளார்கள். தமிழக அரசு மத்திய அரசோடு இணக்கம் இல்லாமல் இருப்பதால் தான் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது.
தேர்தலுக்கு யார் சாதகமாக இருப்பார்களோ அவர்களுக்கு அரசு சாதகமாக இருக்கும். தேர்தலுக்கு முன் இன்னும் பல அறிவிப்புகளை வரலாம், பல அறிவிப்புகளை நான் எதிர்பார்க்கிறேன்.
எது நடந்தாலும் இன்னும் நான்கு மாதங்கள் கொண்டாடிக் கொள்ளட்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
சாராய அலைகளின் மூடாமல் போதை பொருட்களை ஒழிக்காமல் போதைப்பொருட்கள் எதிரான வைகோவின் நடைப்பயணத்தை முதலமைச்சர் இங்கு துவக்கி வைக்கிறார்.
புதுச்சேரியில் நான் துணைநிலை ஆளுநராக இருந்த பொழுது அங்கு பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் பொருத்தம் அதில் அனைத்து மாணவர்களும் பயனடைந்தார்கள்.
நாளை தமிழகத்தில் லேப்டாப் வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது. உலக தரத்திலான லேப்டாப்புகள் வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சேர்ந்த சிவன் நாடார் உடைய எச்சிஎல் நிறுவனம் அந்த பட்டியலில் இல்லை.
கோவில்கள் அனைத்தும் அமைச்சர் சேகர்பாபு சொத்து போல் அவர் செயல்படுகிறார். எல்லாம் கும்பாபிஷேகங்களைலயும் நான் தான் நடத்த வேண்டும் என செயல்படும் சேகர் பாபு, ஒரு கும்பாபிஷேகத்திற்காவது முதலமைச்சரை அழைத்து வந்துள்ளாரா. மதச்சார்புள்ளவர்களாக நடந்து கொள்பவர்கள் இந்த திமுகவினர் தான்.
ஏற்கனவே உள்ள தேர்தல் அறிக்கையில் பாதி நிறைவேற்றவில்லை தற்பொழுது மீண்டும் புது தேர்தல் அறிக்கை தயாரித்து அதிலும் பாதியை நிறைவேற்றாமல் விடுவார்கள் ஏற்கனவே அறிவித்ததை முதலில் நிறைவேற்றட்டும் என்று தமிழிசை விமர்சித்து உள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN