Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 04 ஜனவரி (ஹி.ச.)
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணையில் திருப்தி இல்லாத சூழலில் நீதியரசர்கள் ஜி ஆர் சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர் நேரடியாகவே தாமிரபரணி ஆற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு செய்த பின்னர் பல்வேறு உத்தரவுகளை நீதியரசர்கள் பிறப்பித்தும் கழிவுநீர் கலப்பது சாக்கடை கலப்பை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றின் மாசை கட்டுப்படுத்த ராஜஸ்தானில் வறண்டு போன ஓடைகளை ஆறுகளை மீட்டெடுத்த மகசேசே விருது பெற்ற நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திரசிங்கை ஆணையராக நியமித்து தாமிரபரணியை தூய்மை செய்ய தேவையான நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் ராஜேந்திர சிங் நேரில் களப்பணி செய்து செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தேவையான விலை பட்டியலை சமர்ப்பிக்கவும் நேற்று உத்தரவிட்டது.
வழக்கின் மனுதாரர் முத்தாலங்குறிச்சி காமராசுடன் இணைந்து தாமிரபரணி நதி மற்றும் கழிவு நீர் கலப்பு பகுதிகள் என 26 இடங்களை தேர்வு செய்து நீர்நிலை நிபுணர் ராஜேந்திர சிங் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
Hindusthan Samachar / GOKILA arumugam