Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.)
43 வது தமிழ்நாடு மாநில அளவிலான ஜூனியர் & சீனியர் கராத்தே போட்டி 2026 நிகழ்ச்சி சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விசிக தலைவர் திருமாவளவன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,
மதவாத எதிர்ப்பு கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல்கள் நடைபெறுவதைக் கண்டித்து, ஜனவரி 5 அன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழக முதல்வர் அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தை விசிக வரவேற்கிறது.
இதை பாஜக தரப்பு வரவேற்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதனை பாஜக விமர்சிப்பது அரசியல் நோக்கத்திற்காகவே,
இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, நிலுவைத் தொகையை வழங்க அரசு முன்வர வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசுப் பணியிலேயே நீடிக்கச் செய்ய வேண்டும்.
பாஜக தலைவர்கள் தேர்தலை ஒட்டி அடிக்கடி தமிழகத்திற்கு வருவார்கள் என்றும், தேர்தல் நேரத்தில் மக்களை சந்தித்து ஜனநாயக ரீதியாக பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக சொல்வார்கள்.
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசை வரவேற்பதாகவும், நிதி ஆதாரத்தை பொறுத்து முதல்வர் இதனை உயர்த்தி வழங்கப் பரிசீலிப்பார்.
சீமான், திருமாவளவன் இளம் தலைமுறைக்கு ஒரு பெரியார் என்று குறிப்பிட்டது குறித்துக் கேட்டபோது,
என் மீது அவர் வைத்த மதிப்புக்கு நன்றி.
பெரியாரை ஏற்க மறுத்து, திருமாவளவன் தான் இளம் பெரியார் என்று சொல்வது ஒரு அரசியல் சாதுரியம் என்று பதிலளித்தார்.
திக, திமுக மீது சீமானுக்கு விமர்சனம்/ முரண்பாடு இருக்கலாம்.
ஆனால் பெரியாரின் அரசியல் என்பது தன்னலமற்ற அரசியல். பெரியாரை வீழ்த்த நினைக்கும் சக்திகளின் நோக்கம் நிறைவேற சீமானின் அரசியல் ஏதுவாக அமைந்து விடக்கூடாது என்றும், விசிக பேசுவது பெரியாரின் அரசியலை தான் என்றும், பெரியாரிய அரசியலே விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கான அடித்தளம்,என்றும் விளக்கமளித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam