தமிழக வெற்றிக்கழகத்தில் முக்கிய பிரமுகர்கள் நாளை இணைய வாய்ப்புள்ளதாக தகவல்!.
தமிழ்நாடு, 04 ஜனவரி (ஹி.ச.) தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்த பிறகு அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர். அதிமுகவை சேர்ந்த முன்னணி தலைவர்களும் பிற கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் தாவேக உடன் தொடர்ந்து ப
தவெக அலுவலகம்


தமிழ்நாடு, 04 ஜனவரி (ஹி.ச.)

தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்த பிறகு அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

அதிமுகவை சேர்ந்த முன்னணி தலைவர்களும் பிற கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் தாவேக உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், நாளை தவெகவில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் இணைகின்றனர்.

இந்நிலையில்,

சென்னை ஈசிஆர் சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கழக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் மற்றும் விஜய்யின் நெருங்கிய நண்பர் விஷ்ணு ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைவதற்கு முன்பு கட்சியின் தலைமை அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி 23 வது சுயேச்சை மாமன்ற உறுப்பினர் ராஜன் பர்னபாஸ், புதுச்சேரி முன்னாள் அதிமுக எம்எல்ஏ எல்.பெரியசாமி, புதுச்சேரி முன்னாள் காவல்துறை ஐஜி ராமசந்திரன் மற்றும் தேமுதிக நிர்வாகி உள்ளிட்டோருடன் சந்தித்து கழக முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam