Enter your Email Address to subscribe to our newsletters

உத்திரபிரதேசம், 04 ஜனவரி (ஹி.ச.)
உ.பி.யின் புலந்த்ஷாஹரின் சகோட் பகுதியில், வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை அதே பகுதியால் வசிக்கும் ராஜு, வீறு காஷ்யப் என்ற 2 இளைஞகள் ஆசை வார்த்தை கூறி அங்குள்ள கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வைத்து இருவரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மொட்டை மாடியில் இருந்து சிறுமி விழுந்ததாக கூறப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுமியின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த புகாரில்,
தன் மகள் வழக்கம் போல் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த நிலையில், அக்குடியிருப்பின் பின்புறம் உள்ள நிலத்தில் துாக்கி வீசப்பட்டு இறந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், குடியிருப்பில் வாடகைக்கு வசிக்கும் ராஜு, வீறு காஷ்யப் ஆகியோர் தன் மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே கட்டுமான பணி நடக்கும் கட்டடத்திற்குள் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
அவர்களை பிடிக்க சென்றபோது தப்பிக்க முயன்றதால், இருவரையும் கால்களில் சுட்டு போலீசார் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மாடியில் இருந்து துாக்கி வீசியதை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் மீது போக்சோ மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam