Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 04 ஜனவரி (ஹி.ச)
உலகப் புகழ்பெற்ற தில்லை நடராசர் ஆலயத்தில் உள்ள சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தில் மர்ம நபர் ஒருவர் கருவறைக்குள் சென்று சுவாமி முன்பு உள்ள கலசத்தில் இருந்த பாலை மேலே ஊற்றிக் கொண்டு நான் தான் கடவுள் என பேசி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பக்தர்களை கேவலமாகப் பேசி அறநிலையைத்துறையை அறங்கெட்ட துறையாக மாற்றி வரும் சேகர்பாபு போல் பலர் உருவாவது தான் இந்துக் கோவில்களுக்கு இந்த விடியா ஆட்சியில் தரும் பாதுகாப்பு. இந்த இந்து விரோத திமுக ஆட்சியில் கோவில் விக்கிரகங்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லா சூழலில் இப்போது அந்நியர்கள் கருவறை வரை சென்று அதன் புனிதத்தைக் கெடுப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
தினசரி உலகமெங்கும் உள்ள பல ஆயிரம் சிவபக்தர்கள் கூடும் தில்லையில் இப்படி ஓர் பாதுகாப்பு குறைபாடு அதுவும் ஆரூத்ரா போன்ற சிறப்பு நாளில் சரிவர இல்லாதது ஆலயங்களுக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இனி இதுபோல் சம்பவம் நடைபெறாவண்ணம் கோவில்களின் பாதுகாப்பினையும், புனிதத்தையும் உறுதி செய்யுமாறு இந்து அறநிலையத்துறையை வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ