Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 5 ஜனவரி (ஹி.ச.)
இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி யு.ஏ.இ., மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
நட்பு வெளிநாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் விதமாக இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி இன்று ( 5-ம் தேதி ) முதல் 8-ம் தேதி வரையில் யு.ஏ.இ., மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
முதலில் யு.ஏ.இ.,க்கு செல்லும் தளபதி ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் மூத்த தலைவர்களைச் சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து ராணுவ அதிகாரிகள், வீரர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
தொடரந்து 7 மற்றும் 8-ம் தேதிகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தளபதி இலங்கை ராணுவ தளபதி, பாதுகாப்புத்துறை துணை அமைச்சர், பாதுகாப்புத்துறை செயலாளர், மூத்த ராணுவ மற்றும் பல்வேறு தலவர்களை சந்தித்து பேச உள்ளார்.
தளபதியின் இரு நாடுகள் பயணம் இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதற்கும், ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதற்கும் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.
என அதன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM