பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் பிறந்தநாள் - முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் வாழ்த்து
புதுடெல்லி, 05 ஜனவரி (ஹி.ச.) மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா(பாஜக) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி தனது பிறந்த நாளை இன்று (ஜனவரி 05) கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்த
பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் பிறந்தநாள் - முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் வாழ்த்து


புதுடெல்லி, 05 ஜனவரி (ஹி.ச.)

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா(பாஜக) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி தனது பிறந்த நாளை இன்று

(ஜனவரி 05) கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதேபோன்று முரளி மனோகர் ஜோஷியின் பிறந்த நாளுக்கு அக்கட்சியின் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவரான நிதின் நபின் ஆகியோர், முரளி மனோகர் ஜோஷியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வீட்டுக்கு சென்று இனிப்பு வழங்கி, பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர். இதன்பின்னர் இருவரும் அவருடன் சிறிது நேரம் உரையாடினர்.

கடந்த டிசம்பர் மாதம் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் பதவிக்கு நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டதும், மரியாதை நிமித்தம், கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b