Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 05 ஜனவரி (ஹி.ச)
சூரஜ் எங்கே?,எழுந்து நிற்கக்கூட தெம்பில்லாதவரை எந்த தைரியத்தில் அரசு வெளி மாநிலம் செல்ல அனுமதித்தது ஏன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திமுகவின் போதை மாடல் ஆட்சியில், கஞ்சா போதை தலைக்கேறிய நான்கு சிறுவர்கள் வடமாநில இளைஞரான சூரஜ் மீது தொடுத்த கொடூரத் தாக்குதல் தமிழகத்தையே உலுக்கியது. இரத்தம் சொட்ட சொட்ட குத்துயிரும் கொலையுயிருமாக அந்த இளைஞர் சுருண்டு கிடந்த காட்சிகளை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் நமது நெஞ்சம் அச்சத்தில் உறைந்து போகிறது. ஆனால், மனசாட்சியை அடகுவைத்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் திமுக அரசோ, பாதிக்கப்பட்ட சூரஜ் என்ற இளைஞரை என்ன செய்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட சூரஜ், தாயிடம் செல்வதற்காக கெஞ்சி கூத்தாடினாராம், கையெழுத்து வாங்கிக்கொண்டு காவல்துறை அனுப்பி வைத்ததாம். கேட்பவன் கேனையாக இருந்தால் கருணாநிதி கலங்கமற்றவர் என்று சொல்லும் பேய் கதையாகல்லவா இருக்கிறது இது? எழுந்து நிற்கக்கூட தெம்பில்லாதவரை எந்த தைரியத்தில் அரசு வெளி மாநிலம் செல்ல அனுமதித்தது?
தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கால் தாக்கப்பட்ட சூரஜ், முறையான சிகிச்சைகளின்றி அவசர அவசரமாக இடமாற்றப்பட்டதன் பின்னணி என்ன? அவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறாரா? உள்ளிட்ட மக்களின் சந்தேகங்களுக்கு ஆளும் அரசு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ