மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.) மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 05) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, மேற்கு வங்கா
மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 05) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

மேற்கு வங்காளத்தின் மாண்புமிகு முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தீதி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

முதலமைச்சராக, உங்கள் ஆட்சி நிர்வாகத்தின் வழிகாட்டும் கொள்கையாக மதச்சார்பின்மையை நிலைநிறுத்தி, மாநிலம் அனைவருக்கும் சமமாக சொந்தமானது என்பதை உறுதி செய்துள்ளீர்கள்.

ஆட்சி செய்வதற்கான இந்த அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, அரசியலமைப்பு விழுமியங்களையும் சமூக நல்லிணக்கத்தையும் தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b