சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீசை எதிர்த்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.) சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீசை எதிர்த்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து அமலாக்கத் துறை அதிகாரிகளை அணுக அமைச்சர் பெரியசாமி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம
Ip


Madras High Court


சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)

சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீசை எதிர்த்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து அமலாக்கத் துறை அதிகாரிகளை அணுக அமைச்சர் பெரியசாமி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

2006-11 ல் அமைச்சராக பதவி வகித்த போது ரூ.2 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்திருந்தனர்.

லஞ்ச ஒழிப்பு துறையினர் பதிவு செய்த சொத்து வழக்கு அடிப்படையில் அமலாக்க துறை விசாரணை மேற்கொண்டு சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக அமலாக்க துறை அமைச்சர் பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அமலாக்க துறை நோட்டீசை எதிர்த்து அமைச்சர் பெரியசாமி தரப்பில் தாக்கல் செய்த மனு மீது தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டனர்

Hindusthan Samachar / P YUVARAJ