Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 5 ஜனவரி (ஹி.ச.)
இந்திய கடலோர காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான சமுத்திரா பிரதாப் என்ற கப்பலை, அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஜனவரி 05) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இது தொடர்பாக கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இரண்டு மாசு கட்டுப்பாட்டு கப்பல்களில் முதலாவதாக சமுத்திர பிரதாப் கப்பலை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இக்கப்பலில், பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 60 சதவீதம் உள்நாட்டை சேர்ந்தவை. இந்த கப்பல் 114. 5 மீட்டர் நீளம், 4,200டன் எடை கொண்டது.
6 ஆயிரம் கடல் மைல் தூரம் வரை செல்லக்கூடியது. இக்கப்பலில் ரசாயன கண்டுபிடிப்பு கருவிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் மாசுவை அகற்றும் இதர சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
60 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் கட்டமைக்காப்பட்ட இக்கப்பல், பாதுகாப்புத்துறை உற்பத்தியில் இந்தியாவின் தன்னிறைவு நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.
மேலும் இக்கப்பல் மூலம் கடலில் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கும், இந்திய கடலோர காவல்படையின் திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
மேம்பட்ட மாசுபாடு தடுப்பு மற்றும் தீயணைப்பு அமைப்புகள் இக்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது.
இது பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் அதற்கு அப்பால் எண்ணெய் கசிவுகள், கடல் சார் அவசர நிலைகள், பாதுாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான கடலோர காவல்படையின் திறனை கணிசமாக அதிகரிக்கும்.
2021ம் ஆண்டு ஜூன் 22 அன்று கோவா கப்பல் கட்டும் தளத்தில் 583 கோடி ரூபாய் செலவில் இரண்டு மாசு கட்டுப்பாட்டு கப்பல்களை கட்டுவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டது.
அதில், முதலாவது கப்பல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM